Wednesday, August 8, 2018

Feelings Expressing by Robot Affects the Mood of Humans: Information On The Study!

ரோபோவால் வெளிப்படுத்தப்படும் உணர்வுகளால் மனிதர்கள் பாதிப்படைகின்றனர் என ஜெர்மனியைச் சேர்ந்த டியூஸ்பர்க் - எஸ்ஸன் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. மனித மூளையைப் போன்ற அறிவுத்திறன், நடத்தைக் கூறுகள் மற்றும் உணர்வு நிலைகளை, உயிரற்ற ரோபோ போன்ற இயந்திரங்களிடம் காணும்பொழுது இத்தகைய எதிர்வினையை மனித மனம் வெளிப்படுத்துவதாக ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. ரோபோக்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளுக்கு மனிதர்கள் தங்களை இழந்து விடுகின்றனர்.
2007 ஆம் ஆண்டு ஆய்வுக் குழுவினர் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். இதற்கு, "கெஞ்சும் கம்பியூட்டர் மரணிக்க விரும்புவதில்லை (Begging computer does not want to die)" எனப் பெயர் வைத்திருந்தனர். ஒரு ரோபோ பூனையின் (Robot cat) இயக்கத்தை நிறுத்த வேண்டும் (switch off) என இந்த ஆய்வில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அப்பொழுது அந்த ரோபோ பூனை, "என்னுடைய இயக்கத்தை நிறுத்த வேண்டாம்". எனக் கெஞ்சினால் பங்கேற்பாளர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன
ரோபோ
இந்த ஆய்வுக்கு வெவ்வேறு வகையான பங்கேற்பாளர்கள் உட்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு ஆய்விலும் வெவ்வேறு வகையான ரோபோ பூனை பயன்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் 89 நபர்கள் பங்கேற்றனர். ரோபோவின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் அந்த ரோபோ பூனையிடம் உரையாடுங்கள் என ஒவ்வொரு பங்கேற்பாளரிடமும் ஒப்புக்காகக் கேட்டுக் கொள்ளப்பட்டது. உரையாடலின் முடிவில் அந்த இயந்திரப் பூனையின் இயக்கத்தை நிறுத்துமாறு பங்கேற்பாளர்களை ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டனர். குறிப்பாக, "என்னுடைய இயக்கத்தை நிறுத்த வேண்டாம்" என அந்த ரோபோ பூனை கெஞ்சும் பொழுதுதான் அதனுடைய இயக்கத்தை நிறுத்த வேண்டும் எனப் பங்கேற்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அந்தப் பூனை குரல் வழியாகக் கெஞ்சுவதோடு தன்னுடைய கெஞ்சலை எமுத்து வடிவில் திரையில் வெளியிடுமாறும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இயந்திரப் பூனை
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சில பங்கேற்பாளர்களிடம் வழங்கப்பட்ட இயந்திரப் பூனை மட்டும் "என்னுடைய இயக்கத்தை நிறுத்த வேண்டாம்" எனக் கெஞ்சாத வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆய்வுக்கு உட்படுத்தபட்ட பங்கேற்பாளர்கள் கட்டுப்பாட்டுக் குழுவினர் (control group) என வகைப்படுத்தப்பட்டனர்.
43 நபர்கள்
இந்த ஆய்வில் பங்கேற்ற 43 நபர்கள், "இயக்கத்தை நிறுத்து" என ஆராய்ச்சியாளர்கள் சொல்வதைக் கேட்பதா? "இயக்கத்தை நிறுத்த வேண்டாம்" என இயந்திரப் பூனை சொல்வதைக் கேட்பதா? என முடிவெடுக்க முடியாமல் பெரும் மனப் போராட்டத்திற்கு ஆளானதாகத் தெரிவித்தனர்.
அதிக நேரம் யோசிக்கவில்லை
ஆய்வில் பங்கேற்ற 13 நபர்கள் ரோபோவின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தனர். மற்றவர்கள், நீண்ட நேர யோசனைக்குப் பிறகே ரோபோவின் இயக்கத்தை நிறுத்த முன்வந்தனர். கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்த பங்கேற்பாளர்கள் ரோபோவின் இயக்கத்தை நிறுத்த அதிக நேரம் யோசிக்கவில்லை.
பங்கேற்றபாளர் ஒவ்வொருவரிடமும் அவர்களுடைய செயல்பாட்டுக்கான காரணம் கேட்கப்பட்டது. குறிப்பாக, ரோபோவின் இயக்கத்தை நிறுத்த மறுத்த பங்கேற்பாளர்களிடம் அதற்கான காரணம் என்னவென்று கேட்கப்பட்டது
இயக்கத்தை நிறுத்தவில்லை அவர்களுள் பலர், "ரோபோ கேட்டுக் கொண்டதால் அதனுடைய இயக்கத்தை நிறுத்தவில்லை" எனப் பதில் அளித்தனர். மற்றவர்கள், " ரோபோவை எண்ணி வருத்தப்பட்டதாகவும் அதற்கு ஏதோ இடையூறு செய்யப் போகிறோம் என எண்ணி கவலைப்பட்டதாகவும்" தெரிவித்திருந்தன


No comments:

Post a Comment

Feelings Expressing by Robot Affects the Mood of Humans: Information On The Study!

ரோபோவால் வெளிப்படுத்தப்படும் உணர்வுகளால் மனிதர்கள் பாதிப்படைகின்றனர் என ஜெர்மனியைச் சேர்ந்த டியூஸ்பர்க் - எஸ்ஸன் பல்கலைக்கழக ஆய்வில் தெரிய...